மதுரை அருகே அரசு மதுபானக் கடையை மாற்றக் கோரி மாணவிகள் பெற்றோருடன் போராட்டம்

மதுரை அருகே அரசு மதுபானக் கடையை மாற்றக்  கோரி மாணவிகள் பெற்றோருடன் போராட்டம்

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி பெற்றோருடன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்

திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, அரசு பள்ளிக்கூடங்கள் சுப்ரமணியசாமி கோவில், அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன

மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்களுடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, அரசு பள்ளிக்கூடங்கள் சுப்ரமணியசாமி கோவில், அரசு மருத்துவமனை மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.இதனால் ,பேருந்து நிலையம் அருகே அதிக அளவு மக்கள் மற்றும் பெண்கள் வந்து செல்வதாகவும் அரசு பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக அங்கு நான்கு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் பெண்களை மதுக்கடையில் இருந்து வரும் பெரியவர்களால் அடிக்கடி இடையூறு ஏற்படுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் போன்ற நிலை உள்ளது. எனவே, இந்த நான்கு டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்தல் அல்லது அகற்றக் கோரி, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள் பெற்றோர்களுடன் பங்கேற்று ரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்கு பாலம் அமைத்திட வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story