/* */

மதுரை மாநகராட்சியை கண்டித்து தீ பந்தம் ஏந்தி போராட்டம்

மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மதுரை மாநகராட்சியை கண்டித்து தீ பந்தம் ஏந்தி போராட்டம்
X

தீப்பந்தம் ஏற்றி போராட்டம்.

மதுரை:

மதுரை மாநகராட்சியை கண்டித்து, எரியாத தெருவிளக்குகள் மீது தீப்பந்தம் வைத்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ,76 வார்டு பகுதிகளான நேருநகர், மாடக்குளம் மெயின் ரோடு, வானமாமலை நகர், வேல்முருகன் நகர், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், கண்ணை மூடி வலம் வருகிறார்களாம்.

மேலும், அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பலமுறை மாநகராட்சி வாட்ஸ் அப் மூலம் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் எரியாத தெருவிளக்குகள் மீது தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாகவும், மெத்தனப் போக்கில் செயல்படும் மதுரை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக, எரியாத தெரு விளக்குகளை ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் கட்டாயம் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

Updated On: 7 Jan 2022 1:30 PM GMT

Related News