கவிஞர் ஞா.சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கவிஞர் ஞா.சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
X

கவிஞர் சந்திரனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை, பேராசிரியர் ஞானசம்பந்தன் வழங்கினார்.

கவிஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: பேராசிரியர் ஞானசம்பந்தன் வழங்கினார்.

கவிஞர் ஞா.சந்திரனுக்கு சாதனையாளர் விருது: பேராசியர் ஞானசம்பந்தம் வழங்கினார்.

மதுரை கூடல் நகரை சேர்ந்தவர் முனைவர் ஞா. சந்திரன்(47) . மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளிகள் முதுகலை தமிழ் ஆசிரியராய் 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். இவர், தம் ஆசிரியர் பணியோடு நின்று விடாமல், ஓய்வு நேரங்களில் தமிழிலக்கிய பணிகளையும் சிறப்பாக செய்து வருகின்றார். கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் தனித்துவம் உடையவர். கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நகைச்சுவை மன்றங்களில் வாழ்வியல் சிந்தனை, தன்னிம்பிக்கை பேச்சாளர் என்று பன்முக திறமை கொண்டவர்.

தனது படைப்பாற்றல் மூலம் தொலைக்காட்சி, வானொலி, வலையொலி மூலமாக இளைஞர்களை ஆற்றுப்படுத்தி வருகின்றார். கருத்து பூங்கா எனும் வளையொலி அலைவரிசை மூலம் இன்றைய வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள குட்டிக் கதைகளையும், நற்சிந்தனைகளையும் வழங்கி வருகின்றார்.

வெற்றி வித்தைகள் என்னும் வழிகாட்டுதல் அங்கத்தின் மூலம் அரசு பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களை வெற்றி பெற கருத்துரைகள் வழங்கி வருகிறார். கல்விக்கூடங்களிலும், நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு தலைமை பண்பு ஆளுமை திறன் குறித்து கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். இதுவரை இவர் 11 நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் சிந்தனை சுடர் விருது வித்யா ரத்னா விருது இளம் அப்துல் கலாம் விருது இலக்கியச் செல்வர் விருது செந்தமிழ் ஆசிரியர் விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் , இவரை சிறப்பிக்கும் விதத்தில் இவரை பாராட்டி மதுரை நகைச்சுவை மன்றம் சார்பாக தமிழ் இலக்கியப்பணி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை, பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு. ஞான சம்பந்தன் வழங்கினார். உடன், நடிகர் ராஜ் மோகன், ஒருங்கினைப்பார் பாலராமலிங்கம், அமைப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!