திருப்பரங்குன்றத்தில் திடீரென சரிந்த லட்சுமி தீர்த்த படிக்கட்டுகள்

திருப்பரங்குன்றத்தில் திடீரென சரிந்த லட்சுமி தீர்த்த படிக்கட்டுகள்
X

சரிந்து விழுந்த லட்சுமி தீர்த்தத்தின் மேற்குப்பகுதி மூளை.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள லட்சுமி தீர்த்த படிகட்டுகள் திடீரென சரிந்து விழுந்தது.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள லட்சுமி தீர்த்தம் கடந்த சில ஆண்டுகளாகவே எவ்வித பராமரிப்பும் இல்லாமல் அலங்கோலமாக காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது லட்சுமி தீர்த்தத்தில் பக்கவாட்டுச் சுவர் திடீர் திடீரென இடிந்து விழுவது வழக்கமாக கொண்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் லட்சுமி தீர்த்தத்தில் மேற்குப்பகுதி மூளையில் உள்ள ஒரு பகுதியானது திடீரென மளமளவென சரிந்தது. இதனால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், புனிதமான தீர்த்தமாக கருதப்படும் லட்சுமி தீர்த்தத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கோவில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத் துறையும் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்.

இங்கு வாழ்ந்து வந்த சுமார் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து போனது வருத்தம் அளிக்கிறது. உடனடியாக, லட்சுமி தீர்த்தத்தை சீர்செய்து புண்ணிய நதிகளில் இருந்து நீரை எடுத்து வந்து நீர்களை இதோட கலந்து நீரை ஆதாரத்தை பெருக்க வேண்டும். மீன்கள் வளர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பரிகாரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்