திருமங்கலத்தில் பழமை வாய்ந்த விநாயகர் ஆலய குடமுழுக்கு

திருமங்கலத்தில் பழமை வாய்ந்த விநாயகர் ஆலய குடமுழுக்கு
X

திருமங்கலத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மஹாகணபதி திருக்கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேக விழா 

மஹாகணபதி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா மதுரை ஆதீனம் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

திருமங்கலத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மஹாகணபதி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா மதுரை ஆதீனம் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள நாராயண நகரில் , பழமை வாழ்ந்த ஸ்ரீ மகா கணபதி திருக்கோயிலில் , மகா சம்ப்ரோஷணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது .

முன்னதாக, வேத விற்பனர்கள் யாகசாலையில் மூன்று நாட்கள் பூஜை நடத்திய பின்பு , அங்குள்ள பூஜை செய்யப்பட்ட கலச தீர்த்தத்தில் உள்ள கலசங்களை வேத விற்பன்னர்கள் வேத , மந்திரங்கள் முழங்க மகா கணபதி திருக்கோவிலின் கும்பத்திற்கு சம்ப்ரோஷணம் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து, திருக்கோயிலில் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இவ்விழாவில், மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார் . இக்கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து , கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் 2000க்கும் மேற்பட்டோருக்கு திருக்கோயில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!