தாராபட்டி கிராம மந்தையம்மன் ஆலயத்தில் குடமுழுக்கு

சோழவந்தான் அருகே தாராப்பட்டி அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மந்தை அம்மன், ஸ்ரீ காளியம்மனுக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா
Madurai Tamil Nadu Temple -சோழவந்தான் அருகே தாராப்பட்டி அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மந்தை அம்மன், ஸ்ரீ காளியம்மன் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மதுரை மாவட்டம் மதுரை மேற்கு தாலுகா தாராப்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மந்தை அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை பிரசாத் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விக்னேஸ்வர பூஜை வாஸ்து பூஜை உள்ளிட்ட முதலாம் கால யாக வேள்வியை தொடங்கி நடத்தினர்.
நேற்று புதன்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி மாலை மூன்றாம் கால யாக வேள்வியை தொடர்ந்து எந்திர பிரதிஷ்டை விக்கிரக பிரதிஷ்டை கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை அதிகாலை கோபூஜையுடன் தொடங்கி நான்காம் கால யாக வேள்வி நிறைவேற்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து காலை சுமார் 11:30 மணி அளவில் யாத்ரா தானம் நடைபெற்று கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றும் வைபவம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தாராப்பட்டி கிராம ஏழு கரைகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu