அலங்காநல்லூர் அருகே குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அலங்காநல்லூர் அருகே குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

அலங்காநல்லூர் அருகே,66.M.பள்ளபட்டியில் கிராமத்தில், அமைந்துள்ள முத்தாலம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம் விழா.

மகா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, 66.M.பள்ளபட்டியில் கிராமத்தில், அமைந்துள்ள முத்தாலம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், 66.M.பள்ளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன.

மேலும், சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வேள்வியுடன் யாகம் வளர்த்து கால யாக பூஜையுடன் ,கணபதி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், விநாயகர் பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பூஜைகளும் தீபாதாரணைகளும் நடைபெற்றது.

சிவாச்சாரியர்கள் , வேத மந்திரங்கள் முழங்க புனித ஸ்தலங்களில் இருந்துகொண்டு வரப்பட்ட புனித நீரை கோவிலை சுற்றி வலம் வந்து பின் வானத்தில் கருடன் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவில் கருவறையில் அமைந்துள்ள முத்தாலம்மன் சுவாமிக்கு, புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாரணைகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, 66.M.பள்ளபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை