திருப்பரங்குன்றம் கோயில் ஊழியர், பாடசாலை மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

திருப்பரங்குன்றம் கோயில் பணியாளர்களுக்கு பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆறுபடைவீடுகளில் முதல் படைவீடான, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில், வேலம்மாள் மருத்துவமனை சார்பாக, பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், சுப்ரமணிய ஸ்வாமி கோயில் நிர்வாகிகள், ஊழியர்கள், ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட்ட 300க்கும் மேற்பட்டோர், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு. இரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை நோய், உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள், இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!