திருப்பரங்குன்றம் அருகே மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருப்பரங்குன்றம் அருகே மன்னர் திருமலை கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்தும் குறுஞ்செய்தி மூலம் போராட்டத்துக்கு திரண்ட மாணவர்கள்
திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகளை நடத்தக் கோரி இரண்டாவது நாளாக கல்லூரி முன் மறியல் போராட்டம் செய்ய வந்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மன்னர் திருமலை கல்லூரியில் நடப்பு நவம்பர் மாத பருவ தேர்வுகளை (ஆப்லைன்) ரத்து செய்து கல்லூரி நிர்வாகம் ஆன்லைன் தேர்வுகள் என அறிவிக்க கோரி மாணவர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்த வந்தனர். மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் தங்கதுரை, திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் ரவி ஆகியோர் கல்லூரி விடுமுறை அறிவித்தும் திரண்ட 60-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். பருவத்தேர்வுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப் பட்டு வந்தது..
அது பிடிஎப் பைல்களாக உள்ளது. அதை மாற்றி படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ள சூழ்நிலையில், தற்போது, கல்லூரி நிர்வாகம் ஆன்லைன் தேர்வு இல்லாமல் நேரடி தேர்வு எழுதச் சொல்லி மாணவர்களை வற்புறுத்துவதால், தங்களால் தேர்வு எழுத இயலாத சூழ்நிலையில் உரிய பாடத்திட்டங்களை படிக்க முடியாததால், ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ,2வது நாளாக மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த திரண்டனர். பாதுகாப்பு பணியில் காவல் துணை ஆணையர் தங்க துரை மற்றும் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் ரவி தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில ஈடுபட்டு வருகின்றனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu