கருணாநிதி பிறந்த நாள்: சோழவந்தானில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கருணாநிதி பிறந்த நாள்: சோழவந்தானில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

சோழவந்தானில் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

சோழவந்தானில் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூர் திமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 99.வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சோழவந்தான் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் ஏற்பாட்டின் பேரில், பேரூர் திமுக செயலாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது .

இதில் நிர்வாகிகள் பேட்டை கண்ணன், கவுன்சிலர்கள் குருசாமி, முத்துச்செல்வி, சதீஷ் நிஷா, கௌதம ராஜா, ஆலங்கொட்டாரம் சிவா, செல்வராணி, பொருளாளர் எஸ்.எம்.பாண்டி, பேட்டை பெரியசாமி, சங்கோட்டை சந்திரன், மாரிமுத்து, ரவி, பேட்டை அருணா, முதலியார் கோட்டை முருகன், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!