திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் 26ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும். இவற்றில், முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள மோட்ச மண்டபத்தூணில் ஐந்தரை அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் சிவாச்சாரியார்களால் கார்த்திகை தீபம் தயார் செய்யப்பட்டு மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
இன்று காலை உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆதாரதனைகள் நடைபெறும் .
பின்னர், கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க மூலம் பூசப்பட்ட கொடிமரத்தில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu