திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்
X

மதுரை மாவட்டம், திருப்பங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் கார்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலைமேல் உச்சிபிள்ளையார் கோயில் மேல் உள்ள மோட்ச மண்டபத் தூணில் ஐந்துஅரை அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் 150 மீட்டர் காடா துணி திரியாக தயார் செய்யப்பட்டு. 500 லிட்டர் நெய்யில் திரிகள் ஊற வைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது.

திருவண்ணாமலையிலிருந்து வந்த சிவாச்சாரியார்களால் கார்த்திகை தீபம் செப்பு கொப்பரையில் ஏற்ற தயார் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, கோவில் மணி அடித்தவுடன் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு பூஜைகள் முடிந்து கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story