மதுரை அருகே அச்சம்பத்து பள்ளியில் காமராசர் பிறந்த தினம்..!
அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில்,பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது .
மதுரை அருகே காமராஜர் பிறந்த நாள் விழா.
மதுரை,
நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில்,பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார்.பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி, கெவின் குமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஆண்டனி மைக்கேல் விஜயன், கலந்து கொண்டு மழலையர்களுக்கு இனிப்பு வழங்கினார். முடிவில், அக்ஷிதா நன்றி கூறினார்.சிறப்பு விருந்தினர்க்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை , ஜெயலட்சுமி, சுபா ஆகியோர் செய்திருந்தனர்.
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர்களில் திரு. “காமராஜர்” பல்வேறு வகையில் தனி சிறப்புகளை கொண்ட ஒரு மனிதராகவே பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறார். தமிழகத்தில் காமராஜர் செய்த 9 ஆண்டு கால ஆட்சி தான் “தமிழகத்தின் பொற்காலம்” என எல்லோராலும் போற்றப்படுகின்றது.
தன் சிறு வயதில் வறுமை காரணமாக கல்வி கற்க முடியாமல் போனதை எண்ணி எப்போதும் வருந்திய காமராஜர், தனக்கு ஏற்பட்ட இந்த நிலை வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது எனக் கருதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 17,000திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் அன்றைய காலத்தில் வறுமையின் காரணமாக சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட பள்ளி குழந்தைகள் சாப்பிட, “மதிய உணவு திட்டம்” எனும் அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்களில் சிறந்தது இது தான் என போற்றப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது. காமராஜர் பள்ளி கல்வி துறையில் எடுத்த புரட்சிகரமான நடவடிக்கையால் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக காமராஜர் “கல்வி கண் திறந்த காமராஜர்” என சிறப்பு பெயரில் அழைக்கப்படுகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu