முடுவார்பட்டி காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

முடுவார்பட்டி காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
முடுவார்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

முடுவார்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உரைமுறைக்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், மகா பூர்ணகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேகம் என்பதன் பொருள்

கும்பம் என்றால் 'நிறைத்தல்' என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் இறைசக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம். இதனை சைவர்கள் 'மகா கும்பாபிஷேகம்' என்றும் வைணவர்கள் 'மகா சம்ப்ரோக்ஷணம்' என்றும் அழைக்கிறார்கள்.

Tags

Next Story