அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை திருட்டு

அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை திருட்டு
X
அவனியாபுரம் மீனாட்சி நகரில், பூட்டிய வீட்டை உடைத்து, 19 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகரில் வசிப்பவர் சண்முகம் வயது (52 ). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார். நேற்று வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைந்து கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இச்சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் சண்முகம் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் அவனியாபுரம் போலீசார் வீட்டிற்குள் சென்று கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைத்து சோதனை செய்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டை உடைத்து 19 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது .இச்சம்பவம் குறித்து சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.க்கையை முன் வத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்