மதுரை மத்திய சிறைச்சாலை பெண்கள் வார்டில் உலக மகளிர் தின விழா
மதுரை மத்திய சிறையில் உள்ள பெண்கள் வார்டில் நடைபெற்ற உலக மகளிர் தின கொண்டாட்டம்
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி அன்று, "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்து மாற்றத்தை விதைக்க வேண்டும். வேலையில் பாலின சமத்துவத்தை நோக்கி பெண்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிசெய்யவும்,
பெண்கள் எப்போதும் நிதி சுதந்திரமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட யாரையும் எதிர்ப்பார்க்காமல் இருப்பது அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். பெண் சுய தொழில் முனைவோர்களை ஆதரித்து, சமமான பிரதிநிதித்துவம் அளித்தல், பொருளாதார அதிகாரம் அளித்தல் போன்றவை, அவர்களின் வளமான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கச் செய்வது.
உலகெங்கிலும் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சில சவால்களைப் புரிந்து கொள்வது பாலின சமத்துவத்தை ஆதரிப்பதில் ஒரு முக்கியமான படியாகும். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட, பெண்களின் பிரச்னைகள், அதிகாரமளித்தல் மற்றும் சாதனைகள் குறித்து கல்வி கற்பதில் கவனம் செலுத்துவதும் முக்கியமாகும். பெண்களின் மகத்துவத்தை பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக மதுரை பெண்கள் தனிச்சிறையில் உள்ள பெண் சிறைவாசிகளுடன் சிறையில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் இணைந்து சிறைவாசிகளின் கைவண்ணத்தில் உருவான சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தின விழா கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை சிறைத்துறை சரக துணைத்தலைவர் பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் எஸ்.வசந்தகண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.மேலும், மதுரை பாத்திமா மற்றும் லேடி டோக் கல்லூரி மாணவிகள் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, நாடகம் உள்ளிட்டவை அரங்கேற்றினார்.
திருமங்கலம் அருகே மதுரை பாளை மாநிலம் சமூகப் பணி குழு சார்பாக மகளிர் தின விழா
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கண்டிய தேவன் பட்டி கிராமத்தில் , மதுரை பாளை மாநிலம் சமூகப் பணி குழு சார்பில் , மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ,பெண்கள் , முதியோர்கள் உள்ளிட்டோர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ,பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் , பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சட்டங்கள் மூலம் கிடைக்கும் நீதி மற்றும் உரிமைகள் பற்றிதிருமங்கலம் முன்னாள் அரசு வழக்கறிஞர் சம்பத் பங்கேற்று விளக்க உரையாற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu