மதுரை அருகே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

மதுரை அருகே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
X

மதுரை அருகே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.

AIADMK News Today - மதுரை அருகே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

AIADMK News Today -மதுரை மாநகர் மாவட்டம், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டகீழ மாத்தூர், மேலமாத்தூர், கொடிமங்கலம், தாராப்பட்டி ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன..

இது தொடர்பாக, கீழமாத்தூர் ஊராட்சி கழக செயலாளர் துரைப்பாண்டியன் கூறும்போது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ். கட்சியின் இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு பொறுப்புக்களை திறம்பட கையாண்டவர்.

எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஓ.பி.எஸ் மீது பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டிலை வீசியது கண்டனத்திற்கு உரியது.அதனால், தமிழகத்தில் தற்போது ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒற்றை தலைமை என்று முடிவு செய்யப்பட்டால், ஓ.பிஎ.ஸ். பொதுச்செயலாளராக முழு தகுதி உடையவர். அவருக்கு ஆதரவாக துணையாக இருப்போம் இது சம்பந்தமாக கிளைக் கழகத்தில் தீர்மானம் இயற்றியுள்ளோம்.

விரைவில் காவல்துறை அனுமதி பெற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.இதில், கீழ மாத்தூர், மேலமாத்தூர், தாராப்பட்டி , கொடிமங்கலம் ஆகியபகுதிகளிலிருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story