மதுரையில் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..

மதுரையில் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..
X

பைல் படம்.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பரமன் மகன் நாகராஜன் 34. இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வியாபாரம் சரியாக நடைபெறவில்லை. இதனால் பணக்கஷ்டத்தில் இருந்து வந்தார். மன கஷ்டத்திலும் இருந்து வந்தார். இதனால் விஷமருந்திய நிலையில் கல்மேடு பஸ் ஸ்டாப்பில் மயங்கி கிடந்தார்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி செண்பகவள்ளிசிலைமான் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன அதிகாரிக்கு அரிவாள்வெட்டு

மதுரை, எஸ் எஸ் காலனி தாகூர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் 52 .இவர் மேலூர் மெயின் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கம்பெனியில் பிசினஸ் டெவலப்மென்ட் ஆபிஸராக வேலை பார்த்து வருகிறார். இங்கு வேலை செய்தவர் ஆணையூர் கூடல்புதூர் ப அன்பு நகரை சேர்ந்த முத்துசாமி மகன் தியாகராஜன் 33.

இவரது வேலையில் திருப்தி இல்லாததால் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். இதனால் பாஸ்கர் மீது ஆத்திரமடைந்த தியாகராஜன் அவரது அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை ஆபாசமாக பேசி அறிவாளால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வெட்டிய முன்னாள் ஊழியர் தியாகராஜனை கைது செய்தனர்.

அவனியாபுரத்தில் பணம் திருட்டு

மதுரை, அவனியாபுரம் இமானுவேல் நகரை சேர்ந்தவர் பிச்சை மகன் திருப்பதி. இவர் அருப்புக்கோட்டை ரோடு வைக்கம் பெரியார் நகர் சந்திப்பில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அங்கு குடோனும் வைத்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கும்போல் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் திரும்பி வந்து பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பணம் ரூ.2 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து திருப்பதி அவனியாபுரம் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து அவரது குடோனில் திருடிய திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

சென்னை அண்ணாநகர் குச்சி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பாண்டியராணி 55. இவர் மதுரையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக ரயில் மூலம் மதுரை வந்தார். ரயில்வே ஸ்டேஷன் முன்பாக கார் பார்க்கிங் டோல் கேட்டருகே ஆட்டோவுக்காக காத்திருந்தார். அவர் தனியாக நிற்பதைக்கண்ட பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாண்டிய ராணி திலிர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story