மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்,அகத்தர மதிப்பீடு மையம், உடற்கல்வி துறை, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடியது. இந்த நிகழ்வில், ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் யோகா மாஸ்டர் இருளப்பன் யோகாசன பயிற்சிகளை செய்து காட்டினார்.
தெற்கு ரயில்வே தடகள பயிற்சியாளர் திருஞானதுறை,சிறப்பு விருந்தினராக பங்குபெற்று பேசுகையில், உடலும் உள்ளமும் உறுதியுடன் செயல்பட ஒவ்வொருவரும் அவர் தம் வாழ்க்கையில் யோகக் கலையை தினமும் பின்பற்றி வரவேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுதல் வேண்டும் என்று குறிப்பிட்டார்.
செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் ராஜேந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ரமேஷ்குமார், முனைவர் அசோக் குமார், ரகு, முனைவர் ராஜ்குமார்.
தினகரன் மற்றும் குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் சிறந்த யோகா கலையில் தேர்ச்சி பெற்ற மாணவர் காமேஷ் - க்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு நன்றியுரை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் நிறைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மதுரை விமான நிலையம்: மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சியில் ஈடுப்பட்டனர். மதுரை மாவட்டம், மதுரைவிமான நிலையத்தில், உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில்ஒன்பதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு ,மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் .
மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் யோக பயிற்ச்சி செய்தனர்.யோகா பயிற்சி மூலம் மனநலம் உடல் நலம் பாதுகாக்கவும் யோக பயிற்சி உதவும் யோகா பயிற்சியினை தொடர்ந்து செய்தால் மன அழுத்தம், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம் என பயிற்ச்சியாளர் கூறினார்.யோகப பயிற்சியில்மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 180 பேர் கலந்து கொண்டனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu