மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: பாஜக வலியுறுத்தல்
பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன்
மதுரையை தொழில் நகரமாக மாற்றும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டுமென பாஜக மாநில பொது செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிச்சிறப்புகள் உள்ளன. .அதில் தூங்கா நகரம், கோயில் நகரம், நான் மாடக் கூடல், கூடல் மாநகரம் என்றும் பல பெயர்களில் அழைக்ப்படுகிறது.அந்த வரிசையில், மதுரை ஒரு தொழில் நகரமாகவும் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளேன்.
மதுரையில், மிகப்பெரிய தொழில் சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் என்று சொல்லும்படியாக எந்த ஒரு பெரிய நிறுவனங்களும் அமையவில்லை. இதனால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் பலர் வேலை தேடி, சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களை நோக்கி அதிக அளவில் செல்கின்றனர்.
இன்னும் ஒரு சில ஆண்டுகளில், மதுரை உள்கட்டமைப்புகள் அமையப் பெற்ற நகரமாக மாற உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை ஒரு தொழில் நகரமாக மாற்றும் வகையில் மிகப் பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த தமிழக அரசு முன் வரவேண்டும்.
தற்பொழுது, தமிழக அரசால் மாட்டுதாவணியில் அமைய இருக்கும் டைட்டல் பார்க் இதற்க்கு முந்தையே தி.மு.க ஆட்சியின் போது தகவல் தொழிநுட்ப பூங்காகென்று ஒதுக்கபட்டு அடிக்கல் நாட்டபட்டது. அதை வடபழஞ்சியில் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும்
அவ்வாறு, அப்பகுதியில் டைட்டல் பார்க்க அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அப்பகுதிகளில், வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதே போல், மதுரையை சுற்றி உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி கொண்டு இருக்கின்றன. மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட் குவாரிகளும் தடை செய்யபட்டுள்ளன. இதனால், மேலூர் மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது. ஆனால், அதன் அருகில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரைனைட் குவாரிகள் இயங்கவில்லை என்பது மிகவும் வருந்தக்கதாக உள்ளது.
அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மனு அளித்த நிகழ்வில், மதுரை மேற்கு மாவட்ட த்தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சிஅணி மாநில துணைத் தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி ,வழக்கறிஞர் ரவிந்திரன், வேல்முருகன்,வெற்றி கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ், சோலைமணிகண்டன் உட்பட பலர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu