திருப்பரங்குன்றத்தில் தேர் மோதியதால் சாய்ந்த மின் கம்பம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேர்பவனியின்போது எதிர்பாராதவிதமாக தேர் மோதியதால் சாய்ந்த மின்கம்பம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தேரோட்டத்தில் எதிர்பாராதவிதமாக சட்ட தேர் மோதியதால் மின்கம்பம் சாய்ந்தது.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருத்தேரில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் சுற்றி வந்தனர். இதில் பெரிய தேருக்கு முன்பாக விநாயகருடன் சட்டத் தேர் ஒன்று பெண்களால் இழுக்கப்பட்டது.
கிரிவலம் முடிந்து மீண்டும் இந்த சட்டத்தேரானது திருக்கோயிலுக்கு முன்பாக வந்து நிறுத்த முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சார வயர் தேர் மீது பட்டதால் தேர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் உரசியதில் அந்த மின் கம்பம் திடீரென்று சாய்ந்தது. அதிருஷ்டவசமாக இதில் பக்தர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். தற்போது மின் ஊழியர்கள் அந்த மின் கம்பத்தை முழுவதுமாக சாய்த்து அதை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் தேரோட்டத்தின்போது எதிர்பாராவிதமாக சட்டத்தேர் மின்கம்பத்தில் மோதிய சம்பவம் இந்தப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu