மதுரையில் மகளிர் தொழில் கூட்டமைப்பு தொடக்க விழா
மதுரையில் நடைபெர்ற மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு துவக்க விழா:
மதுரை அமரன் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில், மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு துவக்க விழா , சுமதி தலைமையில் நடைபெற்றது .சுவேதா , ஜெயா ஆகியோர் முன்னிலை வைத்தனர் .யோகம் டிரஸ்ட் நிறுவனர் தமயந்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாவட்ட தொழில் மைய மேலாளர் ,டாக்டர் முருகேசன் , எஸ்.பி .எம் டிரஸ்ட் நிறுவனர் எம் அழகர்சாமி ஆகியோர் சமூகத்தில் மகளிர் காண பங்களிப்பு , அரசு திட்டங்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி ,பொருட்களை விற்பனைக்கான திட்டமிடுதல் போன்ற துறைகளில் விளக்கிப் பேசினர் .வைஜெயந்தி நன்றி கூறினார் .கூட்டத்தில், ஏராளமான மகளிர் தொழில் முனைவோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பெண் தொழில் முனைவோர்களின் முன்னேற்றம் குறித்து நடத்திய ஆய்வுகளின் வழியாக இவர்கள் கட்டமைப்பு ரீதியாக , உளவியல் ,சமூக, பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அந்த சிரமங்களை நிறுவன ரீதியாக எதிர்கொள்ளும் விதமாக மகளிர் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT- WOMEN ENTREPRENEURS ASSOCIATION OF TAMILNADU ). தொழில் முனைவின் வழியாக பெண்களை சக்தியாக்கம் பெற செய்வது என்ற பரந்த நோக்கில் மகளிர் தொழிமுனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் WEAT (தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்) செய்வது வருகிறது.
சமுதாயத்தின் அடிமட்டத்தில் பல்வேறு திறமைகளையும், ஆளுமை பண்புகளையும் உள்ளடக்கிய பல பெண்கள் முன்னேற , அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டி எவ்வித பாகுபாடின்றி அனைவரது முன்னேற்றத்திற்கும் பெரிதும் பாடுபட்டு அவர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் தகுந்த ஆலோசனைகளையும் , ஆதரவையும் பெண் தொழில் முனைவோர்களுக்கு அளித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu