தொழிலதிபரின் காரில் இருந்த ரூ. 3.75 லட்சம் பணம் திருட்டு
மதுரை அருகே காரில் வைத்திருந்த மூன்றே முக்கால் லட்சம் திருட்டு: போலீஸார் விசாரணை
மதுரை திருநகர் சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் ராஜா 46 .இவர் சிலைமான் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவர் தனது காரில் மதுரைக்குச் சென்றார். தொழிற்சாலைக்கு தேவையான ரா மெட்டீரியல்ஸ் வாங்குவதற்காக ரூ 3,75,000ஐ எடுத்துச் சென்றார் .அந்த பணத்தை கார் டாஸ் போர்டில் வைத்திருந்தார்.அவர் விரகனூர் திருப்புவனம் செல்லும் வழியில் டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார் டாஸ் போர்டில் வைத்திருந்த ரூ மூன்று லட்சத்து 75,000ம் திருடப்பட்டிருந்தது. இந்தத்திருட்டு குறித்து ராஜா சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரில் இருந்து பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
திருப்பாலையில்வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை
மதுரை கண்ணணேந்தல் ஜி ஆர் நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் மதிமாறன் 46. சம்பவத்தந்து இவர் வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளேபுகுந்த மர்மநபர் அவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த முக்கா பவுன் தங்க நகையைரூ 99ஆயிரத்தையும் கொள்ளையடித்துச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து மதிமாறன் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
வெவ்வேறு சம்பவங்களில். இரண்டு பேர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரைஅவனியாபுரம் வெள்ளைக்கல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் இளங்கோவன் 36. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி பரமேஸ்வரி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொருவர் தூக்கு..
வில்லாபுரம் சித்தி விநாயகர் கோவில் தெரு துளசிராம் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 42. இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் .இவருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பாண்டியராஜன் மனைவியின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்தும் அவருடைய மனைவி ஜெயலட்சுமி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தபால் தந்தி நகரில் பாத்திய வியாபாரியிடம் வழிப்பறி: இரண்டு பேர் கைது.
மதுரை விஸ்வநாதபுரம் விவேகானந்தர் முதல் தெருவை சேர்ந்தவர் சுந்தர் 54. இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார் .இவர் தபால் தந்தி நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டினர். அவரிடம் இருந்து ரூ 2ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டனர். இந்த வழிப்பறி குறித்து சுந்தர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆனையூர் முத்தமிழ் நகர் விரிவாக்க பகுதி ஜெகநாதன் 47, அதே பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் சுரேஷ் 32 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu