மதுரையில், பல்வேறு பகுதிகளில், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு!

மதுரையில், பல்வேறு பகுதிகளில், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு!
X
மதுரையில், பல்வேறு பகுதிகளில், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர்

மதுரை மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையில் குழு உறுப்பினர் பெருமக்கள் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்

மதுரை மாவட்டத்தில் இன்று (01.11.2023) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர்ஃகும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் , தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் குழு பல்வேறு திட்டப்பணிகள் குறித்து நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்கள்.


இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர்ஃகும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தலைவராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரூபாய் 86 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் செல்லூர் கண்மாய் சீரமைப்பு பணிகள் குறித்தும், ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பரவை தடுப்பணை அமைக்கும் பணிகள் குறித்தும், ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் தேனூர் தடுப்பணை அமைக்கும் பணிகள் குறித்தும், நேரடியாக ஆய்வு செய்தோம். மேலும்,

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் திருமால்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோம். இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.


தொடர்ந்து, ரூபாய் 4 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கோச்சடை குளம் சீரமைப்பு பணிகள் குறித்தும், கோச்சடையில் நடராஜ் நகர் பகுதியில் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மயான சீரமைப்பு பணிகள் குறித்தும், ரூபாய் 21 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் அனுப்பானடி கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அனுப்பானடி கால்வாய் சீரமைப்பு பணிகள் வருகின்ற 20 நாட்களுக்குள் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக பணிகளை துரிதமாக மேற்கொண்டு பணிகளை நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியில் பயின்று மிகப்பெரிய தொழில் நிறுவனராக விளங்கும் சிவ்நாடார் , ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்களை கட்டி கொடுத்துள்ளார்கள். அதேபோல், இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்ன என்பதை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் கண்டறிந்து அப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் வாயிலாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் மூலம் 9 துறைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். இந்த துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் என்ன என்பதை கண்டறிந்து உடனடியாக நிறைவேற்றப்படும். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது காரியாப்பட்டி பகுதியில் 40 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கையான 43 வீடுகளுக்கு உடனடியாக பட்டா ஆணை வழங்க நடவடிக்கை மேற்

கொள்ளப்பட்டுள்ளது என, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர்ஃகும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் பேசினார்.

அதன்பின்பு , மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர்ஃகும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையில் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வணிகவரித்துறை, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை , பள்ளிக்கல்வித் துறை, குறுஇ சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஆகிய 9 துறைகள் சார்ந்த திட்டப்பணிகள் மானியக் கோரிக்கையின்போது, அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் என, பல்வேறு தரவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மதுரை கிழக்கு, வாடிப்பட்டி, மதுரை வடக்கு, பேரையூர் ஆகிய வருவாய் வட்டங்களைச் சார்ந்த 51 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா ஆணைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்புப் பெட்டிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்புப் பெட்டிகள் என ,

மொத்தம் 76 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர்ஃகும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் வழங்கினார் .

இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் எஸ்.காந்திராஜன், (வேடசந்தூர்), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார்கோயில்), ச.சிவகுமார் , (மயிலம்), செல்லூர் கே. ராஜு (மதுரை மேற்கு) கோ.தளபதி, (மதுரை வடக்கு), வி.பி.நாகைமாலி, (கீழ்வேளூர்), மு.பூமிநாதன் , (மதுரை தெற்கு), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் டாக்டர்.கே.ஸ்ரீனிவாசன் , சட்டமன்றப் பேரவை கூடுதல் செயலாளர் பி.சுப்பிரமணியன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி டாக்டர்.மோனிகா ராணா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!