சிலையை அவமதிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்

சிலையை அவமதிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்
X

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பாக வடிமமைக்கப் பட்ட பிரத்யேக பிரசார வாகன சேவையை துவக்கி வைத்தனர்

தமிழகத்தில் தலைவர்கள் சிலைகளை அவமதிப்பு செய்பவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரையில் வரும் 29ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுக அரசைக் கண்டித்து, நடைபெறும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக வடிமமைக்கப்பட்ட பிரத்யேக பிரசார வாகன சேவையை துவக்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ மேலும் கூறியதாவது:அதிமுகவில் போட்டி இருக்கும் பொறாமை இருக்காது. தமிழகத்தில் தலைவர்கள் சிலை அவமதிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது .சிலை அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.தமிழகத்தில் எந்த தலைவர் சிலையும் அவமதிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!