சோழவந்தான் அருகே கணவன், மனைவி தற்கொலை

சோழவந்தான் அருகே கணவன், மனைவி தற்கொலை
X

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர்.

சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்த திருப்பதி (50), அவரது மனைவி தீபா (40), இருவரும் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். பிணத்தை கைப்பற்றி சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், சென்னையில் உள்ள மகன் போன் செய்து எடுக்காத நிலையில் அருகில் உள்ளவர்களிடம் போன் செய்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியிருக்கிறார். கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் சடலமாக இருந்தனர்.

இதனை அடுத்து, சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பந்தமாக சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!