மதுரையில் பலத்த மழை: கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி

மதுரையில் பலத்த மழை: கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி
X

மதுரையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பிற்பகல் பெய்த கனமழையால், பக்தர்கள் அவதிப்பட்டனர். மதுரை நகரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. கள்ளழகர் ,மதுரை தேனூர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . அதைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர் . திடீரென, பெய்த மழையால் பக்தர்கள் அவதியுற்றனர். இன்று முற்பகல், மதுரை நகரில் வெப்பம் அதிகம் காணப்பட்டது. அதை தணிக்கும் வகையில், பலத்த மழை பெய்தது. மதுரை நகர் மட்டுமல்லாமல், மதுரையை ச் சுற்றியுள்ள மேலூர், ஒத்தக்கடை, கருப்பாயூரணி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

Tags

Next Story