மதுரையில் பலத்த மழை: நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுப்பு

மதுரையில் பலத்த மழை: நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுப்பு
X

மதுரை பழங்காநத்தம்பகுதியில் தேங்கியுள்ள மழைநீர்

மதுரையில் நேற்றிரவு சுமார் 4 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக கூட்டுறவு பண்டக, மருந்தகம் மற்றும் வாகன காப்பகத்துக்குள் புகுந்த தண்ணீர்

மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில், முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் மூலம் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய பைப்பு லைன் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வருகிறது.

மேலும், குடிநீர் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு பண்டக சாலை, கார் பார்க்கிங் கூட்டுறவு மருந்தகம் உள்ளிட்டவைகளில் , லட்சக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் புகுந்து, வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

இந்த வெள்ளத்தில் எம்.டி.டி.சி நிறுவனத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் வாகனம், மற்றும் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட லாரி உட்பட கனரக வாகனம் 50க்கும் மேற்பட்ட வாகனம் குடிதண்ணீர் குல் சிக்கி மாட்டிக்கொண்டது.

இதனால், வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டு வாகன ஒட்டிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், தற்போது வரை பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி எம்.டி.டி.சி பண்டக சாலைக்குள் புகுந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் யாருமே இது வரைக்கும் சம்பவ இடத்திற்கு வராததால் இன்னும் பல லட்ச லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் மதுரை மாநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகின்ற நிலையில், மேலும், குழாய் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!