மதுரை அருகே, பலத்த மழை: மின்கம்பம் சாய்ந்து தொழிலாளி இறப்பு!
சூறை காற்றுடன் பெய்த கனமழையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த காளவாசல் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலி-மதுரை அருகே அரங்கேறிய சோகம்:
மதுரை.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சாக்கிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காசிநாதன். செங்கல் காளவாசல் பகுதியில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில், மின்சாரம் செல்லும் மின் கம்பங்கள் சாய்ந்ததன. செங்கல் காளவாசலுக்கு சென்ற கூலி தொழிலாளி காசிநாதன் மின்சாரம் மரம் சாய்ந்து கம்பிகள் அருந்து கிடப்பது தெரியமால் , காசிநாதன் நடந்து சென்று போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே காசிநாதன் உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி காசிநாதன் உயிரிழந்ததை கண்ட அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து, ஆஸ்டின்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இத்தகவல்யறிந்து, வந்த ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் காசிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, ஆஸ்டின்பட்டி காவல் துறையினர், காசிநாதன் மின்சாரம் தாக்கி தான் உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடந்து சென்ற போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் மிதித்து மின்சாரம் தாக்கி காளவாசல் கூலி தொழிலாளி உயிர்ழந்த சம்பவம் சாக்கிலிப்பட்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu