திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தர்கள்
X
சுபமுகூர்த்த நாளான இன்று, திருப்பரங்குன்றம் கோவிலில், சமூக இடைவெளியை மறந்து கூடிய பக்தர்கள்.
By - N. Ravichandran |8 Sept 2021 3:42 PM IST
திருப்பரங்குன்றம் கோயிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளான முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், இன்று முகூர்த்த நாள் என்பதால், அதிக அளவு திருமணங்கள் நடைபெற்றன.
திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல்,பங்கேற்றனர். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாய் இருந்ததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தகவல் அறிந்து வந்த்காவல்துறை, சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், முகக்கவசம் அணிந்து வாருங்கள் என, ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்தாலும், அதை உதாசீனம் செய்து பொதுமக்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது, அதிருப்தியை தருவதாக இருந்தது.

இதனால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்கள் விழிப்புடன் இல்லை என்றால், கொரோனா நோய் தொற்று பரவலை ஒழிக்க முடியாது என வேதனையுடன் தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu