மதுரையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து - பரபரப்பு

மதுரையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து - பரபரப்பு
X

மதுரை விமான நிலையத்தில், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்துக்குள்ளானதில், முன்பகுதி சேதமடைந்தது.

மதுரை விமான நிலையத்தில் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்துக்குள்ளானது; அவர் காயமின்றி தப்பினார்.

மதுரை விமானநிலையத்தில், ஒமிக்ரான் பரிசோதனை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சருடன் பங்கேற்றுவிட்டு, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கிளம்பும் போது, அவரின் கார் இடித்து, முன் பகுதி சேதமடைந்தது.

எனினும், இந்த சிறு விபத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக அவர் மாற்றுக் காரில் ஏறி பயணமானார். இதனால் ,மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!