ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று..!

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று..!
X
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

மதுரை:

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்றுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. கால்நடைத்துறை சார்பில் வெளியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காளைகளை பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாடு திமில் தெரியும் வகையில் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், புகழ்பெற்ற அலங்காரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆகியவற்றில் ஏராளமான காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு விழாவில், பங்கேற்கும் காளைகளை பரிசோதிக்க கால்நடை மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை காண பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டு, ஜல்லிக்கட்டு கண்டு ரசிப்பர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு சிறப்பு பரிசும், காளைகளைப் பிடிக்க வீரர்களுக்கு சிறப்பு பரிசும்,ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது .

அலங்கா ஜல்லிக்கட்டு ஒட்டி வெளிநாட்டவர் கண்டு களிக்க மேடைகள் அமைக்கப்படும்.

அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். விரைவில் முதல்வர் திறந்து வைப்பார் என்றார்.

அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட எஸ்.பி.சிவபிரசாத், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story