Health Care Awareness Cycle Rally மதுரை அருகே உடல் நலஆரோக்கிய,விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

Health Care Awareness Cycle Rally  மதுரை அருகே உடல் நலஆரோக்கிய,விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
X

மதுரை அருகே உடல் நலம் குறித்து, விழிப்புணர்வு  சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

Health Care Awareness Cycle Rally

Health Care Awareness Cycle Rally

மதுரை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.மதுரை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் பிட்( fit India) இந்தியா எனும் அமைப்பு சார்பில் ஆரோக்கியம், உடல் நலம் மனநலத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது .

இதில், மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டட் விஸ்வநாதன் மற்றும் ஆய்வாளர் நரேந்திர குப்தா மற்றும் 50 வீரர்கள் கலந்து கொண்ட உடல்நலம் குறித்த விழிப்புணர்வு பதாகைகய்களை ஏந்தி சைக்கிளில் விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி வரை ஊர்வலமாக சென்று மீண்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் அலுவலகத்திற்கு சென்றனர்.மதுரை விமான நிலையம் பகுதியில் பொதுமக்கள் இடையே உடல்நலம் மனவலிமை ஆகியவற்றுடன் ஆரோக்கியமாக இருப்பதற்காக சைக்கிள் பேரணி சென்றது பெரும் வரவேற்பு பெற்றது.

சைக்கிள் ஓட்டுவதால் நம் உடலும் மனமும் ஆரோக்யமாகவே இருக்கும். ஆனால் தற்காலத்தில் இரு சக்கர வாகனப் பெருக்கம் அதிகரித்து போனதால் சைக்கிள் ஓட்டுபவர்களை காண்பதே அரிதாகிப் போனது. பலரும் சைக்கிள் ஓட்டுவது அவர்களுடைய இமேஜைப் பாதிக்கும் என கருதுகின்றனர். அப்படி இல்லவே இல்லை. நம் உடல் ஆரோக்யமாக இருந்தால்தான் நாம் செய்யும் செயல்களும் சிறப்படையும் என்று அனைவருமே கருத வேண்டும். இதில் மற்ற எந்தவித பாகுபாடுகளையும் பார்க்க கூடாது. நாம் சைக்கிளில் பயணிக்கும்போது நமது ஒட்டுமொத்த உடல் உறுப்புகள் அனைத்துமே இயங்குகின்றன. வேறு எந்த உடற்பயிற்சி( நீச்சல் தவிர)யிலும் அனைத்து உறுப்புகளும் இயங்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். எனவே சிறுவயது முதல் சைக்கிள் தொடர்ந்து ஓட்டி வரும் பட்சத்தில் நம் உடலில் தேவையற்ற சதைகள் பெருகாது.... பிட்னஸ் ஆ வே இருக்கும் ..உடலும் புத்துணர்வு பெறும் ....

Tags

Next Story
ai solutions for small business