/* */

கைத்தறி ஆடை அணியுமாறு அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்ய கூடிய ஆடைகளை அரசு அதிகாரிகள் அணியுமாறு அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

HIGHLIGHTS

கைத்தறி ஆடை அணியுமாறு அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி
X

கைத்தறிக் கூடம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நிலையூர் அருகே உள்ள கைத்தறி நகர் பகுதியில் வசிக்கக்கூடிய 5000 மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ஆடைகளை அரசு அதிகாரிகள் வாரத்திற்கு இரண்டு முறை அணியுமாறு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறியதை வரவேற்கும் விதமாக தங்களது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ,இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் தெரிவிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால், கைத்தறிநெசவு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்திருக்கக்கூடிய ஆடைகள் அனைத்தும் தேங்கியுள்ளது. தற்போது, முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர் பெருமக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கைத்தறி நெசவு ஆடைகள் அணிவதனால், எங்களது வாழ்வாதாரம் மேம்படும்.

வெயில் காலங்களில் கைத்தறி ஆடைகள் அணிவதன் மூலம் உடலுக்கு எவ்வித இடையூறும் வராது. எனவே, முதல்வர் கூறியதை வரவேற்பதாகவும், கைத்தறி நெசவாளர் நிலையறிந்து கூறிய முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

Updated On: 18 July 2021 4:45 PM GMT

Related News