மதுரையில் ஆலங்கட்டி மழை: வெப்பத்தில் வாடிய மக்கள் மகிழ்ச்சி
மதுரையில் பெய்த ஆலங்கட்டி மழை
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆலங்கட்டி மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில், கோடை வெயில் காலம் தொடங்கியதிலிருந்து மதுரையில் சுமார் 90 டிகிரியில் இருந்து 100 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலையிலிருந்து வெயில் 100 டிகிரிக்கு மேலாக அடித்து வந்த நிலையில் ,மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில் ,மதுரை மாநகர், மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பசுமலை பைக்கரா, அழகப்பன் நகர், பழங்காநத்தம், வசந்த நகர், ஆண்டாள்புரம், நேரு நகர், பைபாஸ் சாலை காளவாசல் குரு தியேட்டர் மாடக்குளம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொய்தது. இந்த நிலையில், மதுரை நிலையூர், கூத்தியார் கூண்டு, மாடக்குளம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழிந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்தனர்..
மதுரை அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், தாசில்தார் நகர், கருப்பாயூரணி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால், சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu