ராகுல்காந்திக்கு குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது

ராகுல்காந்திக்கு குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது
X

விழாவில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்பிமாணிக்கம் தாகூருக்கு, மாணவர்கள் பறை இசை எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

விழாவில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்பிமாணிக்கம் தாகூருக்கு, மாணவர்கள் பறை இசை எழுப்பி வரவேற்பு அளித்தனர்

திருப்பரங்குன்றம் அருகே சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் நடைபெற்ற நேரு யுவ கேந்திரா மாணவர்கள் கலை விழா நடைபெற்றது.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மாணவர்கள் கலாசார கலை விழாவில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்பிமாணிக்கம் தாகூருக்கு, மாணவர்கள் பறை இசை எழுப்பி வரவேற்பு அளித்தனர்.மாணவர்களின் தயாரிப்பு கடைகளை பார்வையிட்டார்.விழாவில் ,மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவிண்குமார், நேரு யுவ கேந்திரா இயக்குனர் செந்தில்குமார்,சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாணிக்கம் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியது: ராகுல்காந்திக்கு குஜராத் தீதிமன்றனறம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. அடுத்தாக உச்சநீதிமன்றத்துக்கு அந்த வழக்கு செல்வது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானி என இருவரின் நட்பு குறித்து மக்களவையில் ராகுல்காந்தி பேசினார். அதற்காக கோபப்பட்டு போடப்பட்ட வழக்கு இது.அவரை மீண்டும் மக்களவையில் பேசவிடக்கூடாது என்பதன் வெளிப்பாடு இது. மக்களின் வேலை வாய்ப்பின்மை, மதநல்லிணக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அவர் பேசவிடாமல் செய்யப்பட்ட சதி இது. இது வரும்காலத்தில் முறியடிக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தில், நீதிகிடைக்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு தேர்தலின்போது தவறு செய்பவர்களுக்கு நல்ல பாடம். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் என நினைக்கிறேன். அதில், எந்த தீர்ப்பு வந்தாலும் .ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க முன்னாள் மத்திய அமைச்சர் பசிதம்பரம் தடுத்தார் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.கடந்த பல ஆண்டுகளாக பாஜக ஆட்சிதான் நடக்கிறது.அவர்கள் விரும்பி இருந்தால், இந்த ஆண்டுகளில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயர் வைத்திருக்கலாம். தேவையில்லாதவைகளை பேசி குழப்பத்தை ஏற்படுத்துவதில் அவர் வல்லவர். அவரது பேச்சுக்கும், செயல்களுக்கும் சம்பந்தம் இருக்காது.

மன அழுத்தம் என்பது பலருக்கும் புரியாத ஒரு நோயாக நாம் பார்க்க வேண்டும். டிஐஜி விஜயகுமார் தற்கொலையை அரசியல் ஆக்குவதோ, சிபிஐ விசாரனை கேட்பது போன்ற சிறுபிள்ளைத் தனமாக முடிவெடுப்பது சரியாக இருக்காது.நல்ல நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருந்து மறைந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தி னருக்கு எனது ஆறுதலை கூறிக்கொள்கிறேன்.

மதுரை மாவட்டத்தில், திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலைக் கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கிராமங்களில் உள்ள கண்மாய்கள், ஊரணிகளில் 10 முதல் 30 அடிகள் வரை மிகப்பெரிய அளவில் மண் அள்ளப்படுகிறது. இத்தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம்

திருமங்கலத்தின் நீர் ஆதாரங்கள் பாதிக்ககூடிய நிலை உள்ளது. இதனைத்தடுக்க வேண்டும். வளர்ச்சி முக்கியம். அதேசமயத்தில், இயற்கை வளங்களை அழிக்க கூடாது. அதிகாரிகள் அதறகு துணை போகக்கூடாது. தமிழக முதல்வர் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நிலையை எடுத்திருக்கிறார். மதுரை மாவட்டத்தில் மண் அள்ளுவதை கட்டுப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மாணிக்கம் தாக்கூர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!