மதுரை பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் வருகை: போலீஸார் பலத்த பாதுகாப்பு

மதுரை பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் வருகை: போலீஸார் பலத்த  பாதுகாப்பு
X

மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.

ஆளுநருக்கு கருப்புக்கொடி காண்பிப்பதையொட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு காரில் திமுக கொடியை அகற்றச் சொன்ன போலீஸார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவிற்காக வருகை புரிய உள்ள சூழ்நிலையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கருப்பு சட்டை அணிபவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவது கிடையாது. இந்நிலையில், தற்போது திமுக கொடியுடன் வந்த ஒரு காரில் இருந்து திமுக கொடி அகற்றப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பேராட்டம் நடைபெற உள்ளதால் விமான நிலையம் .காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீஸார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் நான்கு வழிச்சாலை நுழைவாயில் கீழக்குயில்குடி விளக்கு மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சந்தேகத்திற்குரிய நபர்களை மற்றும் உடைமைகளை சோதனை செய்து பின் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55லது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருவதையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதையொட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விமான நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business