மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ரவி
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். இவ்விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ரவியை, மாவட்ட ஆட்சியர் சங்கீதா வரவேற்றார். பிறகு, ஆளுநர் பல்கலைக்கழக விடுதியில் ஓய்வெடுத்தார்.
பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழிப்பு விழாவில், பங்கேற்றார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழாவை புறக்கணித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆளுநர் வரும்போது அசம்பாவிதம் நடக்க கூடாது என்பதற்காக மதுரை மாவட்ட போலீஸ் எஸ். பி. சிவப்பிரசாத் ஆலோசனை பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
ஆளுநர் வருகையையொட்டி, மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு தமிழக ஆளுநர் ரவி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்காக புறப்பட்டு சென்றார்.
பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் , மதுரை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதுரை விமான நிலையம் முதல் நாகமலை புதுக்கோட்டை வரை போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu