மதுரை அருகே இளம்பெண் எரித்துக் கொலை; போலீசார் தீவிர விசாரணை

மதுரை அருகே இளம்பெண் எரித்துக் கொலை; போலீசார் தீவிர விசாரணை
X

பைல் படம்

அவனியாபுரம் ரிங்ரோடு சி.எம்.எஸ். மில் அருகே இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் வறுகடலை மில் அருகே இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, போலீசார் சென்று பார்த்தபோது முற்றிலும் எரிந்த நிலையில் ஒரு இளம்பெண் உடல் காணப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் பெயர் கிளாடிஸ் மேரி, சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்