மதுரை கோயில்களில் கருடபஞ்சமி, சுவாதி நட்சத்திர நரசிம்ம பூஜை

மதுரை கோயில்களில் கருடபஞ்சமி, சுவாதி நட்சத்திர நரசிம்ம பூஜை
X

மதுரை நகரில் உள்ள பல கோயில்களில் திங்கள்கிழமை கருட பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது(பைல் படம்)

முத்துமாரி ஆலயத்தில், பஞ்சமி ஒட்டி, அம்மன் வராகி அலங்காரத்தில் பக்தருக்கு காட்சி அளிப்பார்

மதுரை நகரில் உள்ள பல கோயில்களில் திங்கள்கிழமை கருட பஞ்சமி விழா கொண்டாடப் படுகிறது.

மதுரையில் உள்ள அண்ணா நகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம் ,மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயம் ஆகிய கோவில்களில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அதைத்தொடர்ந்து அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெறுகிறது.

மேலும், திங்கள் கிழமை கருட பஞ்சமி மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பானகம் மற்றும் பிரசாதங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்கள், நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்தும், பிரசாதங்கள் படைத்து வழிபடுவர்.

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், கருட பஞ்சமி மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் வராகி அம்மன் சந்நிதியில் சிறப்பு ஹோமங்களும், இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மருக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனை வழிபாடுகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் ஆன்மீக குழுவினர் செய்து வருகின்றனர். மதுரை அண்ணா நகர் யானைக்குழாய் முத்துமாரி ஆலயத்தில், பஞ்சமி ஒட்டி, அம்மன் வராகி அலங்காரத்தில் பக்தருக்கு காட்சி அளிப்பார்.

Tags

Next Story
ai healthcare products