விடுதலை வாக்கத்தான் விழிப்புணர்வு நடைப்பயிற்சி..!

விடுதலை வாக்கத்தான் விழிப்புணர்வு நடைப்பயிற்சி..!
X

விடுதலை விழிப்புணர்வுக்கான சாரி வாக்கத்தான்.

விடுதலை வாக்கத்தான் விழிப்புணர்வு நடைப்பயிற்சி :

மதுரை:

மதுரை அருகே உள்ள யானைமலை ஒத்தக்கடை பகுதிகளில்,78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, "விடுதலை வாக்கத்தான்" விழிப்புணர்வு நிகழ்ச்சி (ஞாயிறு) ஆக.11 ம் தேதியன்று பெண்களுக்கான சாரி வாக்கத்தான், சிறுவர்களுக்கான மெல்லோட்டம் வாக்கத்தான் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து, வாக்கத்தான் விழிப்புணர்வுக்கான நடைப்பயிற்சி ஆண்கள் குழந்தை மற்றும் பெண்களுக்கு நரசிங்கம் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் இளங்குமரன் தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பயிற்சியினை, தமிழர் வீர விளையாட்டு பேரவை நிர்வாகி நீலமேகம் துவக்கி வைத்தார். வாக்கத்தான் பயிற்சியாளர் ராமச்சந்திரன் பயிற்சி அளித்தார்.

இதில், பாரதி, பிலால் ராஜா கதிரேசன், ராஜ்குமார், விவேகானந்தன், சரவணன், பிரபாகரன், நாகராஜன், சுரேஷ், அழகப்பன், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியால் நமது நாட்டின் விடுதலை சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. பல எண்ணற்ற உயிர்களை அர்ப்பணித்து பற்ற சுதந்திரம் இதுவாகும்.அந்த சுதந்திர தேசத்துக்காக போராடியவர்களை மரியாதை செய்யும் விதமாக இந்த நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திரப்போராட்டம் குறித்த ஒரு வரலாற்றுத் தெளிவு கிடைக்கும்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!