முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பிறந்தநாள்:பாமக சார்பில் நலத்திட்ட உதவி

முன்னாள் மத்திய அமைச்சர்  அன்புமணி பிறந்தநாள்:பாமக சார்பில் நலத்திட்ட உதவி
X

மதுரையில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் பிறந்தநாளை நலத்திட்ட உதவி வழங்கிக் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியினர்

மதுரையில், பாமக சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் கொண்டாடினர்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ், 53 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில், பாமக சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மதுரை பழங்காந்த்தம் பகுதியில் மாநகர் பா.ம.க சார்பில் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் மற்றும் மாநில துணை பொதுச் செயலாளர் கிட்டு தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அவர்களின் 53- வது பிறந்தநாளை முன்னிட்டு, 500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா, பென்சில்கள் வழங்கி கொண்டாடினர். இந் நிகழ்சியில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் நடராஜன், பா.ம.க மாநில துணைத் தலைவர் செந்தில் குமார், தெற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஏழை எளிய மாணவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!