மதுரை அருகே நிறுத்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னாள் அமைச்சர் ஆய்வு

மதுரை அருகே நிறுத்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னாள் அமைச்சர் ஆய்வு
X

ஆ. கொக்குளம், கிண்ணிமங்கலம் பகுதியில் திடீரென நிறுத்தப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்

ஆ. கொக்குளம், கிண்ணிமங்கலம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏ நேரில் ஆய்வு

ஆ. கொக்குளம், கிண்ணிமங்கலம் பகுதியில் திடீரென நிறுத்தப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே கொக்குளம், கிண்ணிமங்கலம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. திடீரென அது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, விவசாயிகள், முன்னாள் அமைச்சர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். பி .உதயகுமாரிடம், கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், கிண்ணிமங்கலம், மற்றும் ஆ. கொக்குளம் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து, அங்கிருந்து அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார்.உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் பண்பாளன், ஊராட்சி மன்றத் தலைவர் கபி. காசிமாயன், துரை. தன்ராஜ், வக்கீல் திருப்பதி, சிவா.மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story