சோழவந்தான் பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த தினவிழா
அமமுக சார்பில் கருப்பட்டி கிராமத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அக்கட்சியினர்.
சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, இரும்பாடி ஊராட்சி ,பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஒன்றியச் செயலாளர் ராஜன், நகரச் செயலாளர்கள் சத்யபிரகாஷ், மதன், ஒன்றிய இணைச் செயலாளர் சின்னமருது, மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், தலித் முனைவர் பாலு, மாரி, பாண்டி, பாரதி, பிடிஆர் பாண்டி, ஊராட்சி செயலாளர் ரவி உட்பட அமமுக வினர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பாக மகளிர் அணி மாவட்ட இணைச்செயலாளர் மனிதா கட்டத்தேவர், மருத்துவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கருப்பையா, கிளைச் செயலாளர் பழனிஆண்டி, சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், மகளிர் அணி அமைப்பாளர் மரகதம் நாகராஜன், இளைஞர் பாசறை சேது கண்ணன் பூக்கடை முருகன், மன்னாடிமங்கலம் கிராமத்தில் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி தலைமை ஏற்று எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தார்.
பாலு முதலியார், ஜெயலட்சுமி, அழகுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமாட்சி வரவேற்றார். அவைத்தலைவர் பூசணி செல்வம் கொடி ஏற்றி வைத்த விவசாய அணி மாவட்ட நிர்வாகி கந்தன் இனிப்பு வழங்கினார். ஜெயக்குமார், ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், தேனூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், கொடிமங்கலம் கிராமத்தில் கருப்பணன், துவரிமான் கிராமத்தில் ராஜேந்திரன், இரும்பாடி கிராமத்தில் சக்திவேல், கருப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார், நாச்சிகுளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன், விக்கிரமங்கலம் கிராமத்தில் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராஜா, ஒன்றியச் செயலாளர் எம்.வி.பி. ராஜா, வடகாடு பட்டி கிராமத்தில் பிரபு ,குருவித்துறை கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், தச்சம்பத்து கிராமத்தில் முருகன், திருவேடம் கிராமத்தில் சிபிஆர் மணி, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சேது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் ராமநாதன், மேல மட்டையான் கிராமத்தில் கூட்டுறவு சங்க தலைவர் ராமன், கச்சிராயிருப்பு கிராமத்தில் கூட்டுறவு சங்க தலைவர் முனியாண்டி ஆகியோர் அந்த கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu