மோட்டல்களில் உணவுகள் தரமாக இருக்க வேண்டும்: அமைச்சர் கண்ணப்பன் தகவல்

மோட்டல்களில் உணவுகள் தரமாக இருக்க வேண்டும்: அமைச்சர் கண்ணப்பன் தகவல்
X

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

அரசு சார்பாக புதிய மோட்டல்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற மக்களுடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

மோட்டல்களாக இருந்தாலும் உணவுகள் தரமாக இருக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: தேர்தல் சமயங்களில் அரசு வேலைகளைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது. தேர்தலுக்குப் பிறகுதான் பணிகள் தொடங்கும். நடுவில் சில பணிகள் நடக்கும். ஆனால் அதற்கு தற்போது பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் முழுமையாக எதையும் வெளியில் தெரிவிக்க முடியாது.

நெடுஞ்சாலைகளில் உள்ள தரமற்ற மோட்டல்கள் குறித்து குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் வருகின்ற பொழுது எந்த மோட்டல்களாக இருந்தாலும் உணவுகள் தரமாக இருக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு சார்பாக புதிய மோட்டல்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற மக்களுடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும். நகர்ப்புற தேர்தலில் திமுகவுக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளது அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

Tags

Next Story