மதுரையில் உணவுப் பொருள் கண்காட்சி தொடக்கம்
மதுரையில் நடைபெற்ற உணவு பொருள் கண்காட்சி தொடக்க விழா.
மதுரை மாவட்ட நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் ஐடியல் ஆர்ட்ஸ் இணைந்து நடத்தும் உணவு மற்றும் பொருட்கள் மதுரையில் பொருட்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது .
மதுரை மாவட்ட நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மற்றும் ஐடியல் ஆர்ட்ஸ் இணைந்து நடத்தும் உணவு மற்றும் ஷாப்பிங் பொருட்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கியது இந்த பொருட்காட்சி வருகின்ற 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தள்ளுபடி விற்பனையில், புதிய வணிக வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்காக நுகர்வோர் நாள் தோறும் பயன்படுத்தும் நுகரும் பொருள் அடங்கிய சுமார் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், இந்த கண்காட்சியில், எம் எஸ் எம் இ என் சேவையை பற்றி முழு விவரம் கருத்துக்களை சலுகைகளை காப்பீடு இடம் பெற உள்ளது. இதில் வங்கி மற்றும் சீட் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், இந்த கண்காட்சியில் பர்னிச்சர் ,அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் கருவிகள், குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டு அரங்கம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு திருவிழா மட்டும் அதில் 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற உள்ளது. இந்த கண்காட்சியை பொது மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu