மதுரையில் விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி

மதுரையில் விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி
X

மதுரை விமானநிலையத்தில் காத்திருந்த பயணிகள்

எந்த வித தகவலும் தெரிவிக்காமல் 8 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததால் குழந்தைகள் மற்றும் முதியோர்களும் அவதிப்பட்டனர்

மதுரையிலிருந்து பகல் 12 மணிக்கு மும்பை புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் 8 மணி நேரம் தாமதமாகியும் புறப்படாததால் பயணிகள் அவதிப்பட நேரிட்டது.

180 பயணிகளுடன் புறப்படவேண்டிய விமானம் இரவு 11.45 மணிக்குமும்பையிலிருந்து விமாமை வந்தவுடன் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரையில் இருந்து தினமும் மும்பைக்கு இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் என இரண்டு விமான நிறுவனங்கள் மூலம் மும்பைக்கு விமான சேவை நடைபெறுகிறது.இ தில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு இண்டிகோ விமானம் மும்பை புறப்பட்ட நிலையில் 12 மணிக்கு 180 பயணிகளுடன் புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் இரவு 8 மணி வரை புறப்படாமல் இருப்பதால் பயணிகள் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்துள்ளனர்.

இது குறித்து, பயணிகள் விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டதற்கு ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும் என தொடர்ந்து அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருவதாகவும் சரியாக எத்தனை மணிக்கு புறப்படும் என எந்த வித தகவலும் தெரிவிக்காமல் கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியோர்களும் மிகவும் சிரமம் அடைந்துள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், இன்று காலை 11:30 க்கு மதுரையில் இருந்து துபை புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story