மதுரையில் இருந்து 9 மணி நேரம் தாமதமாக துபாய்க்கு புறப்பட்ட விமானம்

மதுரையில் இருந்து  9 மணி நேரம் தாமதமாக துபாய்க்கு புறப்பட்ட விமானம்
X

கோப்பு படம் 

மதுரையில் இருந்து துபாய்க்கு 9 மணி நேரம் காலதாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மதுரையில் இருந்து துபாய்க்கு புதன்கிழமை காலை 11 மணிக்கு துபாய்க்கு செல்லும் விமானத்தில் செல்ல 160 பயணிகள் பயணத்திற்கு தயாராக இருந்தனர். இந்நிலையில் புதன்கிழமை மும்பையில் இருந்து வரவேண்டிய விமானம், இரவு 7 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது. அதன் பின்னரே, மதுரையிலிருந்து இரவு, 9.20 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டுச்சென்றது.

விமானம் தாமதத்தால், அதில் செல்ல இருந்த பயணிகள் 160 பேர், விமான நிலையத்திலேயே காலை முதல் காத்திருந்தனர். பயணிகள் விமான நிலைய வளாகத்திற்குள்ளே ஒன்பதரை மணிநேரம் காத்திருந்ததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!