மதுரை தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து

மதுரை தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து
X

தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை.

மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சின்ன சொக்கிக்குளம் சரோஜினி தெரு பகுதியில் ஜேவிஎஸ் தனியார் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று அலுவலகத்தின் மேல் மாடியில் இருந்த ஜெனரேட்டரில் தீடீரென தீ பிடித்து புகை வந்துள்ளது.

இதனைக் கண்ட நிறுவன ஊழியர்கள், அனைவரும் வெளியேறிய நிலையில், உடனடியாக தல்லாகுளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், ஜெனரேட்டர் முழுவதுமாக எரிந்து நாசமானது. ஜெனரேட்டரை சரியாக பராமரிக்காத காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. தீயணைப்புத்துறையின் துரித அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!