மதுரை ரயில் நிலையம் அருகே வங்கியின் முதல் தளத்தில் தீ விபத்து

மதுரை ரயில் நிலையம் அருகே வங்கியின் முதல் தளத்தில் தீ விபத்து
X

மதுரை ரயில் நிலையம்  அருகிலுள்ள வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து.

மதுரையில் பாரத ஸ்டேட் வங்கியில் நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரையில் பாரத ஸ்டேட் வங்கியில் நள்ளிரவில் நேரிட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செய்யப்பட்டு பெரும் சேதம் ஏற்படாதவகையில் தீயை அணைத்தனர்

மதுரையில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திடீர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் முருகன் மற்றும் மாசானம் ஆகியோர் மதுரை மேல வெளி வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் முதல் தளத்தில் கரும்புகைகள் உடன் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனை அடுத்து, மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு முருகன் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து ,சம்பவ இடத்திற்கு வந்த மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வாகனங்களில் செந்தில்குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் வங்கியில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடி விரைந்து தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து குறித்து மதுரை திடீர்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சேதமான பொருட்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai based agriculture in india